குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 31 அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445) பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க. அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும். சூழ்…
அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக் கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு, பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை ஈட்டுகின்றனர். வெற்றி பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம்…
பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை
காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம். தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும் உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…
