தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…