‘விரல்மொழியர்’-பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் – அறிமுகம்

 ‘விரல்மொழியர்‘ பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்  அறிமுகம் ​  பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகப்  பார்வையற்றவர்களே   தொடங்கும் ம் முதல் தமிழ் மின்னிதழ்  ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில்  பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம். பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும்  படிப்பு,  பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.   இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில்  மொழிப்…

பார்வையற்றோர் போராட்டத்திற்கான அழைப்பு!

ஒன்பது  கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற  மாசி 25, மார்ச்சு 9  அன்று  பார்வையற்ற மாணவர்கள்-  பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற உண்ணாநோன்பு அறப்போராட்டம்! நண்பர்களுக்கு வணக்கம்! வருகிற திங்கட்கிழமை அதாவது 09/03/2015 அன்று நடைபெறவிருக்கும் காலவரையற்ற உண்ணா நோன்பு அறப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது உண்ணா நோன்பு  ஈகையர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு, உறுப்பினர்களிடமிருந்து  உற்சாக  ஆதரவு  வேண்டுகிறோம். பணி நாடுநர்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினர்களையும் மையப்படுத்தியே இந்த ஒன்பது  கோரிக்கைகளும் கட்டமைக்கப்…