132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி) பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில்…

80. பிராமணர்கள் அனைவரும் தமிழ்ப்பகைவர்களா?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 79 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 அப்படியில்லை. எல்லா வகுப்பினரிலும் தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர்; தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் பிராமணர்களில் தமிழ்ப்பகைவர்கள் மிகுதியாக உள்ளனர். இதனடிப்படையில் பிராமணர்களை மூவகையாகப் பிரிக்கலாம். அ.) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழன்பர்கள் ஆ.) சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கருதி, அதற்கடுத்தாற்போல் தமிழை எண்ணும் இருமொழிப் பற்றர்கள். சமற்கிருதத்தை முதன்மைப் படுத்தித் தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவோர் இவர்களில் உள்ளனர். இ.) சமற்கிருதமே உயர்வு எனத் தவறாகக் கருதி, அதனை நிலைநாட்ட…

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அழகார்ந்த செந்தமிழே! வாழ்த்தி வணங்குவமே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே! தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே! சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார் செந்திரு நாவில் சிரித்த…