எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : : case, bail, receipt – தமிழில்: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் ? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். *** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. ‘Possessor…
யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்
யானையியல் (யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன. தும்பி, கரிணி, தோல், கண் டாலி,கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,வழுவை, வேழம், வாரணம், மொய்யே,உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,தந்தி, அத்தி, கடிவை, கயமே,நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,மத்த மா,வே மதகயம், ஆம்பல்,இபம்(ஏ),…
