தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 (திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 -இன் தொடர்ச்சி) மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் பிறந்த நாளில் அவர் எல்லா நாளும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து மக்கள் மகிழ நல்லாட்சி வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாகவும் அதன் தலைமையை நோக்கியும் பீடு நடை போடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. உலகத் தமிழர்களும் தலைவர்களும் வாழ்த்துவதுபோல் தமிழன்னையும் மனங்குளிர்ந்து வாழ்த்த வேண்டுமல்லவா? அதற்கான…
தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….
பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் – இலக்குவனார் திருவள்ளுவன்
பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548) தொகுத்து இனிமையாகச் சொல்பவர் கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர். இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார். சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தொண்டாற்றிவருகிறார். பெங்களூரில்,…
செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 18, 1984 / மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின். தன் பதினாறாம் அகவையிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார். வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின் இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…
பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
கார்த்திகை 11, தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954 அன்று தமிழாய்ப்பிறந்த தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்! தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் வீரம். தமிழ் என்றால் அன்பு. தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன். பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம் தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது! தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த்…
செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய…
தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நள்ளிரவின் கீதத்தை நடுப்பகலின் கோபத்தை காட்டுக்குள் இருக்கும் வேங்கையை கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத் தீ மூட்டிய கவியரசே! இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்! தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே! அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்… உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட என்னால் முடியாது.. என் எழுதி(பேனா) முனையோ வன்னிப்பரப்பின் புழுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று நிதானம் இழந்து நடுக்கத்துடன்…
நீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக நாதன்
இனியும் இனியும் நீதான்! வல்வையின் வடிவே! தமிழர் வாசலின் நிமிர்வே ஐயா! சொல்லிய திசையில் சுடரும் சூரிய தேவே! தழுவும் மெல்லிய காற்றே! பாசம் மேலிடும் ஊற்றே! உன்னை அள்ளியே அணைக்க ஆசை ஆவலோடு உள்ளோம் வாராய்! அற்றைத்திங்கள் நீதான்! அவ்வெண் நிலவும் நீதான், ஓற்றைக்காற்றும் நீதான், ஓண்டமிழ்க் குரலும் நீதான், கோற்றவைப் பிள்ளை நீதான், கொடியர சாள்வாய் நீதான், இற்றைவரைக்கும் நீதான், இனியும் இனியும் நீதான்! நேற்று நீ இருந்தாய் அழகாய் நிலவிலும் நீயே வடிவாய் ஏற்றுமே துதித்தோம்! உன்னில் எத்தனைக்…
தமிழரின் அடையாளத்தை உணர்த்திய பிரபாகரன் வாழ்க! – உலோக நாதன்
நீ பிறந்தாய் – தமிழரின் தனி அடையாளத்தை உலகம் தெரிந்து கொண்டது! நீ பிறந்தாய் – தமிழரின் தீரம் இதுவென்று கண்டு உலகமே அதிர்ந்து நின்றது! நீ பிறந்தாய் – சிங்களனின் திமிரெங்கோ தலைகவிழ்ந்து வீழ்ந்தது! நீ பிறந்தாய் – ஈழத் தேசம் ஒட்டுமொத்தத் தமிழரின் கனவுத் தேசம் ஆனது! இதோ.. கனவுத் தேசம் கைகூடும் நாளின்னும் வெகு தொலைவிலில்லை.. எங்களின் ஒற்றைத் தலைவனே.. கனவுத் தேசம் இனி எங்களின் – இலட்சியத் தேசமென முழங்குவோம்; இந்த இலட்சியத் தேசம் வெல்லும் நாளில் உன்…
தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்
தாயுமானவர் தமிழீழக் கரு சுமந்து தாயுமானவர் ! உயிர் மெய் ஆயுதம் -எனத் “தமிழுக்கு ” அனைத்துமானவர்! உலகத் தமிழர்களின் ஒற்றை முதுகெலும்பு ! தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் -இவை தமிழின் பெருமிதங்கள் இனி தலைவரின் வரலாறும்! – நா.இராசா இரகுநாதன்
அவனே உயிர்ப்பண் – இராசா இரகுநாதன்
தாயகமே தளையறு ! வளையாது வளரும் பனையே ! யாரை வரவேற்க வானை வளைக்கிறாய்? கார்த்திகைப் பூவே யாரைத் தழுவ -உன் காந்தள் விரல்கள் காற்றில் அலைகின்றன? உப்புக்கடலே! யாரை எதிர்நோக்கி எட்டிஎட்டிக் குதிக்கிறாய்? வன்னிக்காடே யாருக்கு மாலைசூட்ட மலர்ந்து கிடக்கிறாய்? ஆதியாழே! யார் இசைக்க சுரம் கூட்டுகிறாய் ? அமுதத் தமிழே ! எவர் எழுத காத்திருக்கிறாய்? விடுதலைப் பண்ணை! தளையறு ! தாயகமே தளையறு ! அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான் அவனே உயிர்ப்பண் ! இராசா இரகுநாதன்
