சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி
சமுதாயம் அன்றும் இன்றும் மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…
புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”
திருக்குறள் அறிஞர் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது” புரோபசு சங்கம் (PROBUS CLUB OF CHENNAI) கொண்டாடிய பொங்கல் விழா சுழற் சங்கத்தின் (ROTARY CLUB) ஆதரவில் இயங்கும் புரோபசு சங்கம் அரசுப் பணியினின்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (IAS OFFICERS) முதலான 350-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைத் தன்பால் கொண்ட ஒரு மாபெரும் சங்கம். 1992-இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் உலகளாவிய நிலையில் பாங்கான பல தொண்டுகளை ஆற்றி வருகின்றது. ஆதரவற்ற…
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன. அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர்…
