செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே!- பரணர்: இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25 செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே! ”செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.” செய்யா=செய்யாதவற்றை, கிளத்தல்=பேசுதல், எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று, செய்யாததைச் செய்ததாகப் பாராட்டிக் கூறுதல் என் நா அறியாததாகும். அஃதாவது பொய்யாகப் புகழ்தல் புலவருக்கு வழக்கமில்லை என்கிறார். நாமும் இதைப் பின்பற்றி ஒருவர் செய்யாததைச் செய்ததாகக் கூறிப் பாராட்டக் கூடாது. *** கண்டீரக் கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். நள்ளியிடம் சென்று புலவர்…
