குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 28 – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண் ௪௱௪௰௩ – 443) பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க. பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம்…
புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் – புலியூர்க் கேசிகன்
புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும். அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும் அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும். தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு…
சங்க இலக்கியங்கள் மங்கா இனிமை பயப்பன – புலியூர்க் கேசிகன்
அகத்தெழும் உணர்வுகள் அனைத்தும் உலகிடை முகிழ்த்திடும் காதலில் முதிர்ந்தே தோன்றிடும்; பருவத்து மலர்ச்சியும் பாவையின் வனப்பும் செறிவுற்று இலங்கும் சேயிழை நல்லாள் மறத்தின் மாண்பும் மலர்தமிழ்ப் பண்பும் திறத்தில் உருவாய்த் திகழுமோர் காளையைக் கண்டதும் அவனிற் கலந்திடத் துடிப்பாள்; நாணும் மடமும் நற்குலப் பண்பும் தாமே அகன்றிடத் தளர்வாள் காதலால்; ஆண்மையும் சிறப்பும் அந்நிலை அகன்றிடப் பெண்மையை நாடிப் பித்தெனும் நிலையில் அவனும் தளர்வான் அங்கவர் கலப்பார்; இங்கிவர் தம்முட் களவிற் கண்டிடும் இன்பமே குறிஞ்சியாம்; இருந்தவள் இரங்கிடல் முல்லையாம்; முதல்வன் ஒழுக்கம் இழுக்கிட…
