(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 519-523 எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.00 எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில்…