85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….
நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 17. நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? o நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று சொல்கிறார்களே! சடங்குகளைப் பிராமணன்தான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சடங்கிற்குரியோர் பூணூல் அணிய வேண்டும் எனச் சனாதனம் வலியுறுத்துவதால்,…
சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(வருணங்கள், செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்) சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 ? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே…
கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்
கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? சாதி என்பது பழந்தமிழரிடம் இல்லாத ஒன்று. இன்றோ, ஆரியரால் புகுத்தப்பட்ட சாதி, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கி, உயிர் பறிக்கும் அளவிற்கு வேரூன்றிய பெருங்கேடாய் மாறிவிட்டது. சாதிகள் சிலவற்றின் அடையாளமாக இருப்பது பூணூல். வீரம் மிகு தமிழர்கள் அம்புறாத்தூணியை அணிந்திருந்தனர். தோளில் அணியும் அம்புகள் நிறைந்த கூடுதான் இது. இது மூவகைப்படும். இதனைப் பார்த்த ஆரியர்கள் இதுபோல் முப்புரி நூலை அணிந்தனர். பிராமணர்களின் அடையாளமாக விளங்குவது பூணூலே. ஆனால், பொற்கொல்லர், தச்சர் முதலான கை வினைஞர்கள் தாங்கள்தான் பிறக்கும்…