(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 14 வெளிநாட்டு வாணிகம் 2 சலாமிசின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாசு (Epiphanias) என்பார், மோசசுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகித்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மசுலினால்…