குறட் கடலிற் சில துளிகள் 33. இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்: இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 33 இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.    (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௭ – 447) கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? பதவுரை இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்;  துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை…

குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௬ – 446) தக்கார்- அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்; ஒழுகுதல்-அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்; வல்லானை-திறமையுடையவனை; செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை. ‘தான்ஒழுக வல்லானை’ என்றதற்குப் பரிமேலழகர் வழியில் பெரியார் சிந்தனை…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்

(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால்  05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு  பெரியாரைத் துணையாகக் கொள்ளல்.   அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை,      திறன்அறிந்து, தேர்ந்து கொளல்.        அறம்அறிந்த, மூத்த அறிவாளர்        பெருநட்பைத் தேர்ந்து கொள்க.   உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும்,      பெற்றியார்ப் பேணிக் கொளல்.        வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க்        காக்கும் பெரியாரைத் துணைக்கொள்.   அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்      …