மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 5 காந்தி, சத்தியமூர்த்தி வழியில் இராசாசியும் இந்திப் பரப்புரைப் பணியில் ஈடுபட்டார். இந்தியப் பள்ளிகளில் பிரித்தானியர் வரலாறு ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் கூறினார் அவர். தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவது அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார். இராசாசியும் சத்தியமூர்த்தியும் தொடர்ச்சியாக இநதிப் பரப்புரையில் ஈடுபட்டனர். எனவே, பெரியார் ஈ.வெ.இரா. “தம் குடியரசு இதழில், பழையன கழிந்து…
பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம்
பெரியார் நோக்கில் திருக்குறள் பெரியாரின் பெரும் பாராட்டைப் பெற்ற ஒரே நூல் திருக்குறள். தன் பாராட்டுக்கான காரணங்கள் பலவற்றை அவர் அடுக்குகிறார். அவற்றுள் சில: திருக்குறள் பாமரர்க்குப் புரிவது, அறிஞரும் ஏற்பது. வள்ளுவர்க்கு யாரும் ஞானப்பால் ஊட்டவில்லை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என வருணாசிரமத் தருமத்தை எதிர்க்கிறது. உயிர்ப்பலியிடும் வேள்வியை எதிர்க்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் அதிகம் இல்லை. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது. மூடநம்பிக்கை இல்லை. மனிதச் சிந்தனைகளுக்கு எதிரான மத ஆதிக்கக் கருத்து இல்லை. ‘பிராமணன்’ என்ற சொல் கையாளப் படவில்லை. மேலும்,…
தன்மதிப்பு வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி
பெரியார் ஈ.வெ. இரா. – நாகம்மை இந்திய அயலக மொழிகள் பண்பாட்டு நிறுவனம் சுயமரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி சனி, ஞாயிறு தோறும்ஆடி 16 / ஆகத்து 1 முதல் தொடக்கம் விண்ணப்ப இறுதி நாள் ஆனி 25, 2045 / 10.07.2015
