(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 5 காந்தி, சத்தியமூர்த்தி வழியில் இராசாசியும் இந்திப் பரப்புரைப் பணியில் ஈடுபட்டார். இந்தியப் பள்ளிகளில் பிரித்தானியர் வரலாறு ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் கூறினார் அவர்.  தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவது அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார். இராசாசியும் சத்தியமூர்த்தியும் தொடர்ச்சியாக இநதிப் பரப்புரையில் ஈடுபட்டனர்.  எனவே, பெரியார் ஈ.வெ.இரா. “தம் குடியரசு இதழில், பழையன கழிந்து…