(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 35 துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.  (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449) முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை. பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்;…