இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்

அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில் தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும்…

தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை

தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவில் ம.இராசேந்திரன் உரை கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும்  இணைந்து  கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன.. இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச்,   சென்னை  எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள்…

மணமக்கள் தமிழ்நடைப்பாவை – மார்க்கு இணையர் வாழ்கவே!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர் திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும் வரும் ஆவணி 24இல் (9-9-2022)  நடைபெறும் திருமண நிகழ்விற்குப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  – பேரா.சுபத்திரா ஆகியோரின் வாழ்த்து திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண: சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live                    https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ewநேரலை நேரம் : திருமணம்              :…

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை

புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30 அண்ணா பொதுநல மன்றம் 108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26 எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தலும் படத்திறப்பும் தமிழ் எழுத்தாளர் கழகம்

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தும் உலகத் தமிழ் எழுச்சி மாநாடு சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018 பெரியார் திடல், சென்னை 600 007 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாநாட்டுப் பொறுப்பாண்மையர்

தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல், சென்னை

  கார்த்திகை 12, 2047 / திசம்பர் 07, 2016 மாலை 6.00  பெரியார் மணியம்மை மன்றம்,சென்னை 600 007   தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல் கலிபூங்குன்றன் சந்திரகாசன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சா.கணேசன் மணிமேகலை கண்ணன் இதயதுல்லா உலகநாயகி பழனியப்பன் வா.மு.சே.திருவள்ளுவர் கண்மதியன் செந்தமிழ்ச்செழியன் வா.மு.சே.ஆண்டவர் திவாகரன் திராவிடர் கழகம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் பன்னாட்டுத் தமிழ் நடுவம்

வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை

ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு  பிற்பகல் 2.30   சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு

தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 :  நன்றியும் பாராட்டும்         தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…

சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு   தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005   தலைமை :  அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…

ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!

கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!   சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…