கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3 பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன. இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன. இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…
வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம். மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார். மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என, மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி…