கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி) பூங்கொடி மாளிகையில் இசை முழக்கம் பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், 80 தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும், ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், 85 கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் செவியகம் பாய்ந்து…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் வியப்பு கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும் ஓவியம் என்ன உருவம் உடையள், 45 பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள் வாமக் காளையர் வழிபடு தெய்வம், 50…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம் கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப் பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி 5 மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக் கொள்ளா தொழியேன்…
