(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்  என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே!  மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை  மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம்,…