வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 594-598) வெருளி நோய்கள் 599-603 599. கடல்கோள் வெருளி – Tsunamiphobia கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி. நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும். சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, எனவே சுனாமி என்றால் துறைமுக அலை எனப் பொருள். தமிழில் இப்பொழுது இதை ஆழிப்பேரலை என்கின்றனர். ஆனால், இஃது அலையல்ல….
