(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி) ஆமாம்  இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம் அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?…