வெருளி நோய்கள் 921-925: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 916-920: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 921-925 கொடுங்கோலன் ஆட்சியால் துன்புறுவோருக்கும் அதனைக் கேள்வியுறுவோருக்கும் ஏற்படும் வெருளி காெடுங்கோலன் வெருளி.காலந்தோறும் உலகெங்கும் கொடுங்கோலாட்சியால் மக்கள் துன்புறுவதால் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவே உள்ளனர்.“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கூறியுள்ளார்.“இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” (பாரதியார்) என்னும் கொடுங்கோலாட்சியால் மக்கள் அது குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். கொடுங்கோலர் வரலாறுகள், படங்கள், படக்காட்சிகள், கதைகள் என எதுவாக இருந்தாலும் கொடுங்கோலர் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 கொப்பூழ் குறித்த அளவுகடந்த பேரச்சம்…
