செய்க பொருளை!: அன்றே சொன்னார்கள்- இலக்குவனார் திருவள்ளுவன்
(செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்- தொடர்ச்சி) செய்க பொருளை! பொருளியலுக்கான இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது பொருளியல் அறிஞர் ஒருவர், பொருள் பகைவரை அழிக்கும் ஆயுதம் என்றார். சான்றோர் சிந்தனை, கால எல்லைகளைத் தாண்டியும் ஒன்றுபடும் என்பதற்குச் சான்றாக அல்லது பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் திகழும் சங்க இலக்கியச் சான்றோர் மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ள பெருமைக்குச் சான்றாக எடுத்துக் கொள்ள சில இலக்கிய வரிகளை நாம் காணலாம். பகைவரின் தருக்கை அழிக்கும் கூரிய படைக்கலம் பொருள்; ஆதலின் பொருளை உண்டாக்குக…
செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர்-அன்றே சொன்னார்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – தொடர்ச்சி) செயல்படாமல் இல்லத்தில் இருப்போரே இல்லாதோர் பொருள் பெற உழைப்பும் பெற்றபின் பகிர்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பொருளியல் அறிஞர்கள் கருத்து. பொதுநலப் பகிர்விற்காகப் பொருளைத் திரட்டும் உழைப்பே தமிழரின் முதன்மை நோக்கமாகும். நம் முன்னோர் பேராசையினால் செல்வம் சேர்க்க எண்ணியதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே செல்வத்தைத் திரட்ட முயன்றனர். அதே நேரம் காதல் இன்பத்தினும் இல்லற இன்பத்தினும் செல்வம் உயர்ந்ததில்லை என்ற மனப்பான்மையும் இருந்துள்ளது. ஆனால், இந்த எண்ணத்தினால் எவ்வகை முயற்சியும்…
ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள்: தொடர்ச்சி) ஈட்டுவோம் பொருளை ஈதலுக்கே! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனத் தெய்வப்புலவரின் தமிழ்மறை (குறள் 247) உணர்த்துகிறது. எனினும் பொருளைத் திரட்டுவதில் தகாத முறை எதுவும் பின்பற்றக் கூடாது என்பதுதான் தமிழர் நெறி. தனி மனிதனாயினும் அரசாயினும் முறைவழியே பொருள் ஈட்டி நல்வகையில் செலவழிக்க வேண்டும் என்று இக்காலத்தில் வலியுறுத்துவதை அன்றே நம்மவர்கள் வலியுறுத்தியமையால் வேறு சில பாடல்களையும் இன்றும் நாளையும் பார்ப்போம். கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு…
செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!-தொடர்ச்சி) செல்வம் திரட்டச் செல்வோம்! நெறியுரைப் பொருளியல் என்பது பொருள் அல்லது செல்வத்தின் நோக்கம் ஒழுக்கம் சார்ந்ததாக, முறை சார்ந்ததாக, மதிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், தமிழர்களின் தொடக்கக்கால நெறியே செல்வத்தின் பயன் என்பது மதிப்பார்ந்த நெறியாகவே உள்ளது. செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தல் என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் செல்வத்தின் பயனே ஈதல் (புறநானூறு 189: 7 ) என்னும் வரி மூலம் விளக்கி இக்கோட்பாட்டை உணர்த்துகிறார். அன்பும் அல்லன…
