மக்கள்நலக் கூட்டணி வலைத்தள விவரங்கள்
மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் – காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற…
மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்! – வைகோ
மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்! – வைகோ ம.தி.மு.க. மாணவரணி மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எழும்பூரில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) நடந்தது. அதன்பின் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகச் சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் நலக் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடத்துவதற்காக மாணவரணி அறிவுரைக் கூட்டத்தை நடத்தினோம். இதில் பிரமிக்கதக்க வகையில் மக்கள் நலக் கூட்டணிக்குப் பேராதரவு…
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! – ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் பொதுவாழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் திருச்சி – 620 020, காசா நகர், சமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எசு.எம். மகாலில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : . புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது…
அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு! மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…
மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி
12.01.2047 / 26.01.2016 [embpicasa id=”6247668481339722001″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2
மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2
மதுரையில் தை 12, 2047 / சனவரி 26, 2016 அன்று நடைபெற்ற மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் [embpicasa id=”6247669125787083041″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா? தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால், கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள். தமிழ்ஈழத்திற்காகக் குரல்…
