௪.   தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்

(௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர்       ௪.   தமிழா உனக்குத் தன்மானமுண்டா? கற்பனையில் உண்டான கல்லுருவங்களைக் கடவுள் என்று வணங்கலாமா?  அவற்றின் முன் படையலிட்டும், பலியிட்டும், பாலாலும், பன்னீராலும், தேனாலும், சருக்கரையாலும் அக்கற்களை முழுக்காட்டி ஆடை சுற்றி, அணிகலன்பூட்டி, பூச் சார்த்திப் பொட்டிட்டு, மண்டியிட்டு விழுந்து கும்பிடலாமா?  உன்னால் செய்ய முடியாத செயல்களை அக்கற்கள் எங்ஙனம் செய்ய முடியும்? அவை பிறர்துணையின்றி அசைய மாட்டா.  வைத்த இடத்தைவிட்டு நகர முடியுமா? உனக்கு நன்மையோ…

மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்!   நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர…

மாய்ப்பதுவா மதவேலை?- முனைவர் க.தமிழமல்லன்

மாய்ப்பதுவா மதவேலை? முனைவர் க.தமிழமல்லன் பாக்கித்தான் பெசாஅவரில் பள்ளிக்குள் சுட்டார்கள் பயனென்ன? நுாற்றுக்கும் மேல்குழந்தை உயிர்பறிப்பால்? ஆக்கித்தான் பார்க்கின்ற அரும்பணியில் இறங்காமல் அறியாத குழந்தைகளை அழித்ததனால் என்னபயன்? போக்குவதால் பல்லுயிரைப் புதுவளர்ச்சி மதம்பெறுமா? போர்க்களத்தில் காட்டாத பெருவீரம் பேதைமையே! நீக்குங்கள் வன்முறையை நிலையான நல்லன்பை நிலவுலகில் விதையுங்கள்! நிலைக்காது மதவெறிகள்! நல்வாழ்க்கை மக்களுக்கு நல்கத்தான் பன்மதங்கள், நாட்டோரை அச்சத்தால் நடுக்குவது மதப்பணியா? கொல்லாத நற்பரிவைக் கொடுப்பதுதான் நன்மதங்கள், கொலைக்களமாய்ப் பள்ளிகளைக் குலைப்பதுவா மதவேலை? பொல்லாத மதப்பிணியால்  கொல்நெஞ்சம் ஆகாமல் புத்தன்பு நீர்கொண்டு புதுக்கிவிடல் மதமன்றோ?…