சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!  “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”                     – புறநானூறு  55, 10. திணை :  பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்  (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…

புறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல்    பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான்  என்பதும் ஆரியப் புராணம்.  ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.   கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர்.  அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன்  பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…