நாலடி நல்கும் நன்னெறி : நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-இலக்குவனார் திருவள்ளுவன்
நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக! நாலடியார் துறவறவியலில் தொடங்கி முதலில் செல்வ நிலையாமை, இளமை நிலையாமை குறித்துக் கூறுகிறது. மூன்றாவதாக யாக்கை நிலையாமையை உரைக்கிறது. யாக்கை என்பது உடலைக் குறிக்கிறது. யாத்தல் என்றால் கட்டல் என்று பொருள். இதிலிருந்து யாக்கை வந்தது. எலும்பு, தசை, தசை நார், இழைகள், உள்ளுறுப்புகள் முதலியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதால் யாக்கை எனப் பெயர் பெற்றது. மூன்று அதிகாரத் தலைப்பு கூறும் நிலையாமை குறித்து மணிமேகலை முன்னரே இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா; (சிறைசெய்…