கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11: அன்றே சொன்னார்கள்49 – – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11 கட்டடங்கள் என்பன வீடுகள் அல்லது மாளிகைகள்  முதலானவற்றுடன் அறச்சாலை முதலானவற்றையும் குறிக்கும். ஆங்காங்கே வழி நடைப்பயணத்திற்கென மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவை போல் கால்நடைகளுக்கென வைக்கோல் இடும் சாலைகளும்  வைக்கோல் தின்று வயிறு நிறைந்த உடன் எருதுகள் நீர் குடிக்க வேண்டும் என்பதால் நன்னீர்க்குளங்களும் அமைத்து இருந்து உள்ளனர். துறவிகள் தங்கும் தவப்பள்ளிகளும் அமைத்திருந்தனர். குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலை உடைய பெரிய…

 கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார்.   …