புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65

(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   மருதம் தொடர்ச்சி   மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60

(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி  னிகல்வலி…

மருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

மருத நிலத்தார் உணவு சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217. ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195). தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்;…