(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும்…