கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா
மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார் கண்டீரா ஓர் இறும்பூதை ! திருப்பாற் கடலில் திருஅமுதம் எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால் கடைந்தான் ; கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் : வள்ளலாரின் தமிழ்த்தொண்டு -மறைமலை இலக்குவனார்
புரட்டாசி 21,2045 / 07.10.2014
ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்
சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014 அன்று நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா ஒளிப்படங்கள் படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.
இலக்குவனார் நினைவரங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், சென்னை
ஆவணி 17, 2045 / செப்.02, 2014
உலகுக்கு வழிகாட்டும் தமிழ்ப்பண்பாடு – பேரா. மறைமலை உரை
ஆவணி 11, 2045 / ஆக.27, 2014 இராசபாளையம் தருமாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம்
இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்
வணக்கம். இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும்ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும்.கீழ்க்காணும்தரவுகளை ஒருங்குகுறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக. என் மின்னஞ்சல்:maraimalai@yahoo.com 1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம் 2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டுகள் 3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு…
கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா
சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது. (ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030) படங்கள் : முனைவர் மறைமலை இலக்குவனார் அமுதா பாலகிருட்டிணன்
கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள்
ஆடி 25, 2045 / ஆக. 08, 2014 காலை கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பேரன் கலைமகன் அவர்களின் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது. தரவு : முனைவர் மறைமலை இலக்குவனார்
சென்னை அண்ணாநகர், சௌந்தரியா குடியிருப்பில் விடுதலை நாள் விழா
குழந்தைகளுக்குத் தமிழில் பேச்சுப்போட்டி, நாடகம், இசை நிகழ்ச்சிகள். சிறப்பாக நடந்தன. மழலையரும்புகள் மணக்கும் தமிழில் அழுத்தம் திருத்தமாகப் பேசுவதைக் கேட்கக் கேட்கக் கொள்ளை மகிழ்ச்சி பிறந்தது. பெருந்தலைவர் அம்பேத்கார் அவர்களைப் பற்றிய பொழிவுகள் அருமையாக இருந்தன. செய்தியும் படங்களும் : மறைமலை இலக்குவனார்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…
மறைமலை உரை – தமிழியல் ஆய்வு மன்றம் – தாம்பரம்
ஆடி 20, 2045 / ஆக. 05,2014 சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்
சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார். சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர். செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்