சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை
சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார் இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்
மெய்யப்பனார் பிறந்தநாள்விழா
மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …
(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!
முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு! இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…
சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு
ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார் ஆத்திரேலியா சிட்டினி நகரில் சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்
[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…
ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014 செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் – பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள். உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று…
மறைமலை இலக்குவனார் : அமெரிக்காவில் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்
பேராசிரியர் ஆண்டர்சன் தம் வகுப்பில் முனைவர் மறைமலை இலக்குவனாரை அறிமுகம் செய்தல்
தமிழ்த்தாயே! – முனைவர் மறைமலை இலக்குவனார்
உன்னை நாள்தோறும் மூச்சுத் திணற வைக்கிறார்கள் இந்த அச்சு அடிப்பாளர்களும் பத்திரிகைக் காரர்களும்! எலும்பில்லாத தங்கள் நாக்கையே ஆயுதமாய்க் கொண்டு உன்னை நாள்தோறும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் ஊடகத் தொகுப்பாளர்கள்! உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சித்திரைவதைச் செய்வதிலேயே இன்பம் அடைகிறார்கள் திரைப்பட நடிக நடிகையரும் பின்னணிப் பாடகர்களும்! உன்னை நாள்தோறும் ஊமைக்காயப் படுத்துகிறார்கள் பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்! பல்கலைக் கழகப் பேர்வழிகளோ உன்னை மானபங்கப் படுத்த முயற்சி செய்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்! தமிழ்த்தாயே! இத்துணை இன்னல்களுக்குப் பிறகும் இன்னும் …….
வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்
பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
மீனியல் (Icthyology)
– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression; நெருக்கம்-Compression; தோள்துடுப்பு-Pelvic Fin; கால்துடுப்பு- Pectoral Fin; புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin; வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels; வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs; புதையிர்த்தடம்-Fossil