புரட்சியில் பூத்த மலர் இலக்குவனார் – க.இந்திரசித்து

புரட்சியில் பூத்த மலர்  – க.இந்திரசித்து   பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…

சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!

சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!   உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி   உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம்,  பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…

மேதகு எசு.ஆர்.நாதன் நினைவேந்தல், சென்னை

சிங்கப்பூர் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு செல்லப்பன் இராமநாதன் நினைவேந்தல்   புரட்டாசி 14, 2047 / செட்டம்பர் 30, 2016 மாலை 5.30 இராயப்பேட்டை முனைவர் ம.நடராசன் இரா.நல்லக்கண்ணு முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் வாசுகி கண்ணப்பன் த.மூர்த்தி அக்கினி அ.இராமநுசம் பெ.கி.பிரபாகரன்

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3   1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.   1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில் வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்று விதி வகுத்த தொல்காப்பியரே முதல் தமிழியக்கப் போராளி. சமற்கிருதத்தின் தோற்றத்திற்கு முன்னமேயே வகுக்கப்பெற்ற இந்த விதி பின்னாளில் சமற்கிருதம் தமிழருக்கு…

வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை

ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு  பிற்பகல் 2.30   சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001

  ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய  பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: மறைமலை இலக்குவனாரின் கூட்டிணைப்புத் தொலையுரை

வைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு  இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET) (கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை         Federation of Tamil Sangams of North America இலக்கியச் சொற்பொழிவு     “மணிப்பிரவாளமும்        தனித்தமிழ் இயக்கமும்”    வழங்குபவர்:   பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்   தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிவுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் தமிழ்ப்புலத்தில்…