இந்து வாழ்வியல் அறமும் + 64. அனைத்து உயிரும் ஒன்றே என்பதுவுமே தமிழ்ச்சனாதனம் என்கிறாரே சேக்கிழான். – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 -. தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக் கர கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே’ இவர்களின் பணிக்குச்(!) சான்றாக ஒரு நிகழ்வைக் காண்போம். கருநாடக மாநிலம் சாம்ராசுநகர் மாவட்டம் சுலவாடி ஊரில் மாரம்மா கோயில் உள்ளது. சாளூர் மடத்தின் பெரிய மடாதிபதி குருசாமி. இதன் இளைய மடாதிபதி மகாதேவசாமி. இருவருக்கும் அதிகார மோதல் இருந்து வந்துள்ளது. மாரம்மா கோயில் பொறுபப்பாளர்களுள் ஒருவரான மாதேசு என்பவரின் மனைவி…
