கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி) பூங்கொடி மாளிகையில் இசை முழக்கம் பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், 80 தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும், ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், 85 கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் செவியகம் பாய்ந்து…