‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!

   தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று  (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார்.   சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…

தனித்தமிழ் இயக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தனித்தமிழின் நோக்கும் போக்கும் தனித்தமிழ் இயக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை சித்திரை 15, 2048 / ஏப்பிரல் 28, 2017 உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தென்மொழி இயக்கம்    

பெருஞ்சித்திரனார் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு

பெருந்தகையீர்,  அனைவரும் வருக! தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக! நாள்: மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு தலைமை: முனைவர்மா.பூங்குன்றன் வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார் திரு.அன்புவாணன்,  பொதுச்செயலர்(உ.த.மு.க) நன்றியுரை:  தோழர்.இளமுருகன் ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம் இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை-100 தொடர்புக்கு: 9444440449, 9443810662.    

தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்

உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….