தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும் இணைய அரங்கம் அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார். இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப்…