மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது. தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது. இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார். தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார். இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை…
கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது
கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க 5000த்திற்கும் அதிகமான தொல்லியல் பொருட்களைத் தமிழக மக்கள் எளிதில் கண்டுணரும் வண்ணம், கீழடித் தொல்லியல் பொருட்களைத் தமிழகத்தில் வைத்து பாதுகாக்கும் நோக்கோடு கடந்த புரட்டாசி 16, 2047 / 02.10.2016 அன்று பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து “கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கிடைக்கபெற்ற ஏறக்குறைய 5000 தொல்லியல் பொருட்களை முறையாக ஆவணம் செய்து, அதனை மக்கள் காணும்…
எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில. புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே. ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும். எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…
