(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 4 இந்திஎதிர்ப்புப் போராட்டங்கள் அடுத்து இக்கால இந்திஎதிர்ப்புப் போராட்டங்களுக்கு வருவோம். 1930-1940 இல் எழுந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ‘முதல் மொழிப்போர்’ என்கின்றனர். பொது மொழி விரும்பிய வடநாட்டுத்தலைவர்கள் இந்தியைப் பரப்பும் பணி 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1893இல் ‘நகரி பிரச்சாரனி சபா’ எனக் காசியிலும் 1910 இல் அலகாபாத்தில் ‘இந்தி சாகித்திய சம்மேளன்’ என்றும் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1905 இல் பனாரசில் தேவநாகரி பரப்புரை அவை…