மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 3 ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா? ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 2 எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர். இறைவன் படைத்தது…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 1 மொழிப்போர் நமது பாடத்திட்டத்தில் இடம் பெறாததால்தான் இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போராளிகள் குறித்தோ, இந்தி முதலான பிற மொழித்திணிப்புகளின் கொடுமை குறித்தோ தமிழ்க்காப்பு உணர்வு தேவை என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இனி ஒரு மொழிப்போர் தோன்றாத அளவிற்கு இந்தித்திணிப்புகளும் பிற மொழித்திணி்பபுகளும் இலலாதவாறு ஆவன செய்ய மொழிப்போர் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும். இந்தித்திணிப்பை மட்டும் குறிப்பிடாமல் சமற்கிருதம், ஆங்கிலம் முதலான பிற மொழித்திணிப்புகளையும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் பார்க்கப்போகிறோம். எனவே்தான், இந்தித்திணிப்பு என்றோ இந்தி…