(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை           கருதிய காதற் களந்தனில் நீதான்           ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180           காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை             தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின்    185           ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும்…