தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்
பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கடினமாய் விட்டது. ஆதலின்…
தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன – அ.நா.பெருமாள்!
வடசொல் கலப்பு இருப்பினும் தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன! பல கலைநூல்கள் வடமொழியிலோ மிகுதியான வடசொல் கலப்புடனோ எழுதப்பட்டுள்ளதைப் பாரத நாட்டில் பல இடங்களில் வழக்கமாக இருப்பதைக் காணலாம். தமிழ் மருத்துவ நூல்கள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவற்றில் கூறப்பட்டுள்ளவை தமிழரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வடசொல் கலப்பாகவே அவை இருக்கும். இவ்வாறு பத தமிழிசை நூல்கள் வடமொழிக் குவியலாகவே வெளிவந்துள்ளன. இருப்பினும் அவற்றில் தமிழுணர்வு சிறப்பாக இணைந்து விளங்குவதைக் காணலாம். இவற்றை நன்கு உணர்ந்து காணின் இந்த…
