(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் : உமக்கு என்ன வேலை? சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது. வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா? சாட்சி : ஆம். இருக்கிறது. வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ? சாட்சி : கட்டிடமாக. விக்கீல் : அதன்…