சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை-ஆளுநர் இரவி;பெண்களைப் பரத்தையர் என்று திருவமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ – சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி – தொடர்ச்சி) சூத்திரனுக்குத் தாழ்வான பெயர் சூட்டுக; பிராமணனுக்கு மங்களத்தையும்; சத்திரியனுக்கு வலிமையையும் வைசியனுக்குப் பொருளையும்; சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டும். – (மனு 2 . 31, 32) அப்படிப் பெயர் சூட்டுவதற்காக உயர்வு தாழ்வுப் பெயர் முடிவுகளையும் மனு கூறுகிறது. “பிராமணனுக்குச் சருமாவென்பதையும்; சத்திரியனுக்கு வருமம் என்பதையும்; வைசியனுக்குப் பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்பேராக இடவேண்டியது.- (மனு 2.32) வருண வேறுபாட்டை வரையறுத்து ஒரு பிரிவினரை மிக…
சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 * தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 24-25 “பெண் தன் விருப்பப்படி வாழக்கூடாது. சிறு வயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது” (மனு 5. 148). “கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!” (மனு 5.154) கடவுளாகச் சொல்லப்படும் இராமன், பெண்களை…
பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும். “ஓர் ஊரில் எல்லாருக்கும்…
வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது – இலக்குவனார் திருவள்ளுவன்
வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது அறநெறிகளைத் தொகுத்துத் தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும் துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் உதவுவது என்பது வேறு. உழைப்பின் பயனை அடுத்தவர் ஏய்த்துத் துய்க்க, நாம் ஏமாளியாய் அடிமையாய் இருப்பது என்பது வேறு. முன்னதைக் கைம்மாறு வேண்டா கடப்பாடாகத் திருவள்ளுவரும்…