(குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 21. வரு முன் காத்திடு! இல்லையேல் அழிவாய்! வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 435) குற்றம் வரும் முன்னர்க் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போல அழியும் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியியல், வணிகவியல், இயந்திரவியல், மின்னியல், பயிரியல் முதலான பல துறை அறிஞர்களும் வரும் முன்னர்க் காத்திடுமாறு கூறுகின்றனர். வைத்தூறு=வைக்கோற்போர்; வைக்கோல்…