எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3 *** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ஆறுவது விழா’ என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். ’வது ’ என்னும் சொல் ‘வரன்’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு ‘வரன்’ பார்ப்பது போல் பலர் தவறாகப், ‘பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும்’ ‘வரன்’ பார்க்கிறேன் என்பார்கள். ‘வது’ என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து…