நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! –தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 16 பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே! சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர், “அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்“ என்கிறார். நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை, …

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன். செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010) ? ஐயா, வணக்கம். உங்களிடம்  தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம். # வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக…

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது…

42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை   இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….