தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.
(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3. 1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத்…
இலக்கிய அமுதம், குவிகம் – இணைய அளவளாவல்
தை 03, 2053 ஞாயிறு மாலை 6.30 16.01.2022 இலக்கிய அமுதம் + குவிகம் வள்ளுவர் விள்ளாத வள்ளுவம் வள்ளுவம் விள்ளாத வள்ளுவர் சிறப்புரை : மருத்துவர் அ.சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணைய நுழைவு எண் 619 157 9931 கடவுச் சொல் / Passcode: kuvikam123 அல்லது https://bit.ly/3wgJCib இணைப்புநம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
உலக நூல்களுக்கு வழிகாட்டி வரும் வள்ளுவம் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 இன் தொடர்ச்சி)
வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை – சொ.வினைதீர்த்தான்
வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு: காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து(Income generating Asset) எனக் கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்ப்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால்…
இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்
யாழெடு யாழெடு கண்ணே! – யாழில் இங்கே இசைத்திடோர் பண்ணே! ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில் ஓங்கியே இன்பம் சிறக்க – (யாழெடு) வேயின் குழலிசை யோடு – இள வேனிற் குயிலெனப் பாடு! நோயின் துயரெலாம் ஓட – உயர் நோக்கமும் ஆக்கமும் கூட – (யாழெடு) இன்பத் தமிழினிற் பாடு! – இனம் ஏற்ற முறத்தினம் நாடு! அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம் ஆர்ந்திடவே வழி தேடு! – (யாழெடு) நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில் நம்மினத்…
வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்
உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன். பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…
