(உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது. உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது! தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது என்கிறோம்.திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால்…